11.09.2021 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடு தழுவியரீதியில் Zürich Stadion Letzigrund இல் நடைபெற்ற UBS Kids Cup சுவிற்சர்லாந்து இறுதிப்போட்டியில் (ஓட்டம், நீளம்பாய்தல், பந்தெறிதல்) தமிழ்க் குழந்தை செல்வி காவியா அகிலரூபன் 7 வயதுப்பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் வின்ரத்தூர் தமிழ்ப்பள்ளியின் மாணவியாவார்.
தமிழ்ச் சமூகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கும் இக் குழந்தைக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை ஊக்குவித்து வழிநடாத்தும் அவரது பெற்றோரைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவர் விளையாட்டுத்துறையிலும் ஏனைய அனைத்துத் துறைகளிலும் மேலும் சிறந்து விளங்கி, தொடர்ந்து சாதனைகள் பல படைக்க வாழ்த்துகிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து