தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்

 

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
தமிழர் திருநாள்
திருவள்ளுவர் ஆண்டு – 2049 தைத்திங்கள் முதலாம் நாள்
(14.01.2018)

 

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினைத் தமிழ்க் கல்விச்சேவைத் தமிழ்ப் பள்ளிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தன. மாநில இணைப்பாளர், பள்ளிமுதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், தமிழ்மக்கள் இணைந்த வகையில் பொங்கல் பொங்கிக் கதிரவனுக்குப் படைத்து மகிழ்ந்தனர்.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழோடும் கோலாட்டம், கும்மி, வில்லிசை போன்ற தமிழர்களின் பாரம்பரியக் கலைகளும் கலைநிகழ்வுகளில் இடம் பெற்றிருந்தன. இவ்விழாவைச் சிறந்த முறையில் திட்டமிட்டு நேர்த்தியாக நடத்திய அனைவருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப் பொங்கல் நிகழ்வுகள் தமிழர் பண்பாட்டினை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவும் அவர்களிடையே தாய்மொழியினதும் தமிழர் பண்பாட்டினதும் பெருமைகளை எடுத்தியம்புவதற்கும் பெரிதும் உதவுகின்றன.