தமிழ் இளையோர் மாநாடு 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் மாநாடு 2019 தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண் மாநகரில் நடைபெற்றது. இதில் தொண்ணூறுக்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டு சுவிஸ் நாட்டில் தமிழ்மொழிக்கல்வி, கலைகள், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு, அதனைக் காக்கவேண்டிய இன்றியமையாமை பற்றிக் கலந்துரையாடினர். அத்துடன் தமிழர்நலன் மற்றும் தமிழ்மொழிக்கல்வி, ...Read More

சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு இந்த ஆண்டு (2019) யூலை மாதம் 4 ஆம் நாள் முதல் 7 ஆம் நாள் வரை அமெரிக்கா சிகாகோ நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மகாநாட்டினை வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA)இ  சிகாகோ தமிழ்ச்சங்கமும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தோடு (IATR) இணைந்து நடாத்தின. அமெரிக்கா உட்பட உலகமெங்கும் வாழும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ...Read More

UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ள தமிழ்மாணவர்கள்

தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஆண்டுதோறும் வலயமட்டமாக நடாத்திவரும் மாணவர்களுக்கான மெயவல்லுனர் போட்டிகள் இவ்வாண்டு UBS Kids Cup போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக வலே, பேர்ண், பாசல், சூரிச், செங்காளன் ஆகிய வலயங்களில் நடைபெற்றன. அவற்றுள் முதலாவதாக வலே வலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுள் பத்தொன்பது மாணவர்கள்  UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம். ...Read More

ஓவியப்போட்டி 2019 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 665 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Oviam Result 2019 ...Read More

ஓவியப்போட்டி 2019

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி 26.05.2019 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடாத்தப்பெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 665 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டியின் முடிவுகளினை 26.06.2019 புதன்கிழமை பள்ளிமுதல்வர் மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 14.09.2019 ஆம் நாள் சூரிச் டிட்டிக்கோன் மண்டபத்தில் ...Read More

சுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக  இன்று, 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 64 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5265 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 334 ...Read More