தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும் 2022-2024 காலப்பகுதியில் நடைபெறவுள்ளன. இதற்காகப் பன்னிரெண்டு பயிற்றுநர்கள் வளவாளர்களாகப் பயிற்றப்பெற்றுள்ளனர். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியினை வழங்கவுள்ளார்கள். இப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 2022 மே மாதம் ஆசிரியர்களிடமிருந்து கோரப்பட்டது. இவ்வாண்டு ...Read More

ஓவியப்போட்டி 2022 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 22.05.2022 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 717 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். Oviam Result 2022 ...Read More

ஓவியப்போட்டி 2022

தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்: 12.05.2022 வியாழக்கிழமை ஓவியப்போட்டி 2022 – விதிமுறை ஓவியப்போட்டி 2022 – விண்ணப்பப்படிவம் ...Read More

UBS Kids Cup சுவிற்சர்லாந்து இறுதிப்போட்டியில் தமிழ்க் குழந்தை தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்

11.09.2021 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடு தழுவியரீதியில் Zürich Stadion Letzigrund இல் நடைபெற்ற UBS Kids Cup சுவிற்சர்லாந்து இறுதிப்போட்டியில் (ஓட்டம், நீளம்பாய்தல், பந்தெறிதல்) தமிழ்க் குழந்தை செல்வி காவியா அகிலரூபன் 7 வயதுப்பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இவர் தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் வின்ரத்தூர் தமிழ்ப்பள்ளியின் மாணவியாவார். தமிழ்ச் சமூகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கும் இக் ...Read More

ஓவியப்போட்டி 2021 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 13.06.2021 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 691 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஓவியப்போட்டி 2021 முடிவுகள் ...Read More

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4586 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 391 ...Read More