முக்கியத்தகவல் Archive

UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ள தமிழ்மாணவர்கள்

தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஆண்டுதோறும் வலயமட்டமாக நடாத்திவரும் மாணவர்களுக்கான மெயவல்லுனர் போட்டிகள் இவ்வாண்டு UBS Kids Cup போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக வலே, பேர்ண், பாசல், சூரிச், செங்காளன் ஆகிய வலயங்களில் நடைபெற்றன. அவற்றுள் முதலாவதாக வலே வலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுள் பத்தொன்பது மாணவர்கள்  UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம். ...Read More

சுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 25 ஆவது பொதுத்தேர்வாக  இன்று, 04.05.2019 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 64 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5265 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 334 ...Read More

முத்தமிழ் விழா 2018

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், தமிழ்மக்களும் இணைந்து  முத்தமிழ் விழாவை 30.09.2018 ஞாயிறு பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், சுவிஸ் நாட்டுப் பிரமுகர்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், தமிழாசிரியர்கள், கலையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள்  என இரண்டாயிரத்திற்கும் ...Read More

ஓவியப்போட்டி 2018: முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால்  27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவுகளுக்கு இங்கே அழுத்தவும்:  Oviyam 2018 Results ...Read More

ஓவியப்போட்டி 2017- முடிவுகள்

ஓவியப்போட்டி 2017 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 28.05.2017 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதளுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 580 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Result – Oviyam 2017 Final ...Read More

பள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவையினால் பள்ளிமுதல்வர்களுக்கான செயலமர்வு  ஒன்று (11.06.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 17.00 மணி வரை பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்றது. கனடா ரொரன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், ரொரன்ரோ மாவட்டக் கல்வித் திணைக்களத்தின் அனைத்துலக மொழிக் கல்வித்திட்ட அலுவலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான கனேடிய நாட்டிற்கான விரிவுரையாளருமான திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்கள் கலந்து கொண்டு ...Read More