முக்கியத்தகவல் Archive

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4586 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 391 ...Read More

இளையோருக்கான தமிழ்க்கல்வி தொடர்பான பயிலரங்கம்

சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள் தொடர்பான அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்க் கல்விச்சேவையால் இளையோருக்கான மாதாந்த இணையவழிப் பயிலரங்கு ஒன்று ஒழுங்குசெய்யப்பெறுகிறது. தமிழ் இளையோருக்கான முதலாவது தமிழ்ப் பயிலரங்கு 11.04.2021 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிமுதல் ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப்போட்டி முடிவுகள்

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது. இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெற்றன. இப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களின் விபரங்கள் இணைக்கப்பெற்றுள்ளது.   தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து. 30.10.2020 ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப் போட்டிகள்

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெறுகின்றன. இப் போட்டிகளில் வயதுப் பிரிவுகளுக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.   கட்டுரை, கவிதைப்போட்டிகள் படிவம் தமிழ்க் கல்விச்சேவை வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை, கவிதைப்போட்டிகள் ...Read More

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான அவசர உதவி 2020

அனைவருக்கும் வணக்கம், தற்போதைய பேரிடர் காரணமாகத் தாயகத்தில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பெற்றுக்கொள்ள முடியாமல் இன்னல்களுக்கு உள்ளளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக, எமது கோரிக்கையினை ஏற்று, தங்களால் முடிந்த நிதி உதவியினை வழங்கிவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.? தாயகத்தில் மக்களுக்கான உதவிகள் அங்கே பதிவுசெய்து இயங்கிவரும் வெளிச்சம் பவுண்டேசன் ...Read More