அறிமுகம்:
சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் மொழிப்பற்றாளர்களால் தோற்றுவிக்கப்பெற்ற தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பெற்று 1995ம் ஆண்டு உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கல்விச்சேவை எனும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அத்துடன் இக்காலப்பகுதிகளில் சுவிற்சர்லாந்து நாட்டின் பலபகுதிகளிலும் இவ்வமைப்பினால் மேலும் பல புதிய தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பெற்று ஒரு பாரிய மொழிக்கல்வி அமைப்பாக இது மாற்றங்கண்டது. இவ்வமைப்பு 2005 முதல் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து என்ற பெயர்மாற்றத்தினைப்பெற்று இயங்கிவருகின்றது.

சுவிற்சர்லாந்து நாட்டில் பிறக்கின்ற ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும் தமிழ் பயில வழிசெய்தல் வேண்டும் எமது மொழியின் தொன்மையையும் பெருமையையும் எமது இனத்தின் தனித்துவச் சிறப்புக்களினையும் கலாச்சார விழுமியங்களினையும் அவர்களுக்கு அடையாளம் காட்டி வளர்க்கவேண்டும் ஆகிய இலக்குகளுடன் தமிழ்க் கல்விச்சேவை செயலாற்றிவருகிறது. தமிழ்மொழியின்பால் பற்றுள்ள பெரியோர்களும் ஆசிரியர்களும் இப்புனிதப்பணியினை தியாக மனப்பாங்குடன் தொடர்ச்சியாக ஆற்றிவருகின்றனர்.

தமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்க் கல்விச்சேவையானதுரூபவ் சுவிற்சர்லாந்து அரசினதும் கல்வித்திணைக்களத்தினதும் அங்கீகாரத்துடனும் அனுசரணையுடனும் செயற்பட்டுவருகிறது. “தாய்மொழி மற்றும் கலாச்சாரம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகள் ஆலோசனை மற்றும் உதவிகளினை சுவிற்சர்லாந்து அரச கல்வித்திணைக்களம் வழங்கி ஊக்குவித்துவருகின்றது.

 

நோக்கம்:

  1. சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகள் தம் தாய்மொழியைக் கற்பதற்கும்ரூபவ் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களினை அறிந்துகொள்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
  2. தாய்மொழிக்கல்வியுடன்ரூபவ் சுவிற்சர்லாந்து நாட்டின் கல்விரூபவ் சமூகரூபவ் வாழ்வியல்ரூபவ் சட்ட அமைப்புமுறைகளினைத் தமிழ்க் குழந்தைகளுக்கு விளக்குவதுடன்ரூபவ் பல்லினப் பண்பாட்டுரூபவ் வாழ்வியல் சூழலில் இணைந்து வாழத் தகைமைப்படுத்தல்.
  3. தாய்மொழி கற்கும் மாணவர்களிடையே தமது éர்வீகம் மற்றும் தாயகம் பற்றிய அறிவை வளர்த்தலும்ரூபவ் அவற்றைப்பற்றிய தேடலை ஊக்குவித்தலும்.
  4. சுவிற்சர்லாந்து அரசாங்கம் மற்றும் கல்வித்திணைக்களத்திற்கு ஏற்புடையவகையில்ரூ அவற்றுடன் இணைந்து நிறுவனமயப்படுத்தப்பட்ட அடிப்படையில் அதிஉயர்தரத்திலான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

தற்போதய நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:

  • திரு. தர்மலிங்கம் தங்கராசா – தலைவர்
  • திருமதி. அமுதா அன்பழகன் – உபதலைவர்
  • திருமதி. பேரின்பவதனி பாஸ்கரலிங்கம் – செயலாளர்
  • திரு. பாலசுந்தரம் பிரேம்ராஜ் – உபசெயலாளர்
  • திரு. கணபதிப்பிள்ளை பகீரதன் – பொருளாளர்
  • திரு. செல்லத்துரை மகேந்திரம்பிள்ளை – கணக்காய்வாளர்
  • செல்வி. துவாரகா சந்திரசேகரசர்மா – உறுப்பினர்
  • திரு. இரவீந்திரநாதன் ஜினோதன் – உறுப்பினர்
  • திரு. ஜெயரத்னராசா வினுசன் – உறுப்பினர்