மெய்வல்லுனர் போட்டி  2018

தமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் கல்விச்சேவையால் நடாத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி இவ்வாண்டும் பேர்ண், ஜெனீவா, செங்காலன், ரிசினோ, பாசல், சூரிச் ஆகிய வலயங்களில் நடைபெறுகின்றது.

இப் போட்டியில் ஓட்டம், பந்தெறிதல், பந்துபொறுக்குதல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற போட்டிகளும் 11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டமும், ஆசிரியர்களுக்கான தேசிக்காய் கரண்டி ஓட்டமும், பெற்றோர்களுக்கான சாக்கோட்டமும் நடைபெறும். போட்டிகளில் வெற்றிபெறும்  வெற்றியாளர்களுக்கான பரிசில்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பெறுவர்.

கல்விச்சேவையால் எதிர்வரும் 02.09.2018 பேர்ண் மாநிலத்தில் முதலாவது முறையாக நடாத்தப்படவிருக்கின்ற விளையாட்டுவிழாவில்  ஒவ்வொரு வலயப்போட்டிகளிலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப்பெற்ற வெற்றியாளர்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

இப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற அனைத்து மாணவர்களுக்கும், ஊக்குவித்த பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு, போட்டியைச் சிறப்பாக நடாத்தப் பணியாற்றுகின்ற  தமிழ்ப்பள்ளிகளின்  பழைய மாணவர்களுக்கும்  எமது பாராட்டுகள்.

மேலதிக புகைப்படங்கள் சார்கான்ஸ்:

https://www.facebook.com/media/set/?set=a.1584179771694308.1073741847.675155379263423&type=1&l=d82f5f8204

மேலதிக புகைப்படங்கள் ரிச்சினோ:

https://www.facebook.com/media/set/?set=a.1583331355112483.1073741846.675155379263423&type=1&l=d4782b7e63

மேலதிக புகைப்படங்கள் பாசல்:

https://www.facebook.com/pg/tamilschool.ch/photos/?tab=album&album_id=1586480974797521