தமிழ் கல்விச்சேவையின் பாசல், பாசல்லான்ட், மோலின், யூரா மாநிலத் தமிழ் பள்ளிகளுடன் பாசல் மாநிலப் பழையமாணவர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழர்திருநாள் நிகழ்வு 15. 01 .2023 ஆம் நாள் லப்பன் எனுமிடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவி புரிந்தார்கள்.
இந்நிகழ்வில் பொங்கலினைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், மாணவர்களுக்கான வர்ணம் தீட்டுதல் , பழைய மாணவர்கள் பெற்றோர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
14:00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வு 18:00 மணியளவில் நிறைவுபெற்றிருந்தது. இந்நிகழ்வானது ஆண்டுதோறும் நடாத்தப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.