சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள் தொடர்பான அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்க் கல்விச்சேவையால் இளையோருக்கான மாதாந்த இணையவழிப் பயிலரங்கு ஒன்று ஒழுங்குசெய்யப்பெறுகிறது.
தமிழ் இளையோருக்கான முதலாவது தமிழ்ப் பயிலரங்கு 11.04.2021 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிமுதல் 16:00 மணிவரை நடைபெறும். இதில் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரும் இணைந்து கருத்துரைகளை வழங்குவர்.
அடுத்துவரும் பயிலரங்குகளுக்கான நாள்கள், கலந்துரையாடப்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பாக, முதலாவது பயிலரங்கில் கலந்துகொள்ளும் இளையோரின் விருப்பறிந்து தீர்மானிக்கப்பெறும்.
தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் மற்றும் தமிழ்மொழிக்கல்வியைத் தொடர விருப்பமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தமிழ் இளையோரையும் இப் பயிலரங்கில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இம் முதலாவது பயிலரங்கில் பங்குகொள்ள விரும்பும் இளையோர்கள் இத்துடன் இணைக்கப்பெற்றுள்ள இணையப்படிவத்தினை முழுமை செய்து அனுப்புங்கள்.
இப் படிவத்தினை முழுமை செய்து அனுப்பியவர்களுக்கு பயிலரங்குக்கான இணைய இணைப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்பெறும்.
இப் பயிலரங்கு தொடர்பான கூடுதல் விபரங்களைத் தமிழ்க் கல்விச்சேவையின் பணியகத்துடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளமுடியும்.